LIC KALIMUTHU
Sunday, October 17, 2010
50 ஆண்டுகளுக்கு முன்
50 ஆண்டுகளுக்கு முன், ரேடியோ வாங்க ஆசைப்பட்டாலும், நடுத்தர மக்களால் ரொக்கமாகப் பணம் கொடுத்து வாங்க முடியாது. தவணை முறையில் வாங்கித் தான், விருப்பப்பட்ட நிகழச்சிகளைக் கேட்க முடிந்தது. அதுபோல, 40 ஆண்டுகளுக்கு முன், விறகு அடுப்பு, கரி அடுப்பு, மண்ணெண்ணெய் ஸ்டவ் பயன்படுத்தி சமையல் செய்தனர். காஸ் ஸ்டவ் வாங்க வேண்டுமெனில், முன்பதிவு செய்து, ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கழித்துத் தான் கனெக்ஷன் கிடைக்கும். சிலிண்டர் விலை 25 ரூபாய் தான். ஆனால், தற்போது தமிழக அரசு, மக்கள் வரிப்பணத்தில், "டிவி' மற்றும் காஸ் ஸ்டவ் வழங்கி வருகிறது. முன்பு ஆண்ட காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க., ஆட்சிகளில், கல்வி, மருத்துவம், சாலை வசதி, போக்குவரத்து வசதி என அத்தியாவசிய இனங்களுக்குத் தான் வரிப்பணத்தைப் பயன்படுத்தினர்.ஆனால், தற்போதைய அரசு, மக்களை ஆடம்பர வாழ்க்கைக்குத் தயார் படுத்தி வருகிறது. இலவச "டிவி' கிடைத்தாலும், சில இடங்களில் மின் வசதி இல்லை. மின் வசதி இருந்தாலும், அடிக்கடி மின்சார பாதிப்பு ஏற்படுகிறது. மாதம் தோறும், கேபிள்"டிவி'க்கு நூறு ரூபாய் கப்பம் கட்ட வேண்டும்.குருவி தலையில் பனங்காய் வைத்தது போல், ஏழை மக்கள் தலையில் தேவையில்லாத செலவுகள் ஏற்படுகின்றன. மக்கள் தாங்களாக வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். அரசு வரிப்பணத்தை, பயனுள்ள காரியங்களுக்குச் செலவழிக்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)